Tuesday, March 9, 2010

இறை வாழ்த்து

மனமெனும் கோவிலில் குடிகொண்ட இறைவா
தினமுனைப் பாடும் திருவருள் தருவாய்
எண்ணிய எண்ணங்கள் ஈடேற அருள்வாய்
நல்லவை எண்ணவே நீயருள் புரிவாய்
பலகோடி உயிர்களை காத்திடுவாய் இறைவா
மனமெனும் கோவிலில் குடிகொண்ட இறைவா
தினமுனைப் பாடும் திருவருள் தருவாய்
தரணியில் தர்மம் தழைத்தோங்கச் செய்வாய்
அன்பெனும் மந்திரம் அனைத்துயிர்காவாய்
கருணையின் கடலே உன்னருள் பெறவே
பொன்னையே தொழுதேன்
போற்றியே பணிந்தேன்
மனமெனும் கோவிலில் குடிகொண்ட இறைவா
தினமுனைப் பாடும் திருவருள் தருவாய்
மனமெனும் கோவிலில் குடிகொண்ட இறைவா
தினமுனைப் பாடும் திருவருள் தருவாய்